பெட்ரோல், டீசல் கார்கள் 2040ஆம் ஆண்டு தடை: பிரிட்டன் அமைச்சர் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் கார்கள் 2040ஆம் ஆண்டு தடை: பிரிட்டன் அமைச்சர் அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் கார்களால் நாட்டில் மாசு அதிகரித்து வருவதால் வரும் 2040ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் முழுமையாக தடை செய்யப்படும் என்று பிரிட்டன் அமைச்சர் Michael Gove என்பவர் அறிவித்துள்ளார்.

பெருகி வரும் பயணங்களுக்கு ஏற்ப நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் ஏற்படும் மாசு பொதுமக்களின் உடல்நலனை பெரிதும் பாதிப்பதால் இந்த கார்களை மிக விரைவில் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் Michael Gove தெரிவித்துள்ளார்.

இதனால் கார் பயன்படுத்தி வரும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் இருபது ஆண்டுகள் இருந்தாலும் பெட்ரோல் டீசலுக்கு மாற்று எரிபொருளை கண்டுபிடிக்காமல் இப்படி ஒரு சட்டம் இயற்றுவது முட்டாள்தனம் என்று பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply