ரூ.2000 நோட்டு நிறுத்தம்: அடுத்த மாதம் முதல் வெளியாகும் ரூ.200 நோட்டு

ரூ.2000 நோட்டு நிறுத்தம்: அடுத்த மாதம் முதல் வெளியாகும் ரூ.200 நோட்டு

கடந்த ஆண்டு ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன் புதியதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்படவுள்ளதாகவும், அதற்கு பதில் அடுத்த மாதம் முதல் ரூ.200 நோட்டுக்கள் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து மத்திய அரசியன் முதலீடு மற்றும் கரன்சி துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி கடந்த மாதம் 21ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், அடுத்த மாதம் புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு, ரூ.200 நோட்டுகள் வருவதால் ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடு குறையும். இதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் அச்சடிக்கப்பட்டு வருவதோடு, அதிகளவில் புழக்கத்திலும் விடப்படுகிறது.

இதன் காரணமாக ரூ.2000 நோட்டுகளை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply