நேற்று ராஜினாமா! இன்று மீண்டும் முதல்வர் பதவி? பீகார் என்ன நடக்கின்றது?

நேற்று ராஜினாமா! இன்று மீண்டும் முதல்வர் பதவி? பீகார் என்ன நடக்கின்றது?

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று அவர் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் லாலு மகன் தேஜஸ்வி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு லாலு சம்மதிக்காததால் நேற்று மாலை நிதிஷ்குமார் தனது முதல்வ பதவியை ராஜினாமா செய்தார்

இந்த நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் லாலு மகன் தேஜஸ்வியும், ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று கவர்னரை சந்திக்கவுள்ளார். இதனால் பீகாரில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply