எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திடீர் கைது. சேலத்தில் பரபரப்பு
ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தற்போது ஏரி தூர்வாறும் அரசியல் செய்து வரும் நிலையில் இன்று இன்று காலை தடையை மீறி ஏரி தூர்வாரும் பணியை பார்வையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கட்சராயன் பாளையத்தில் ஏாியை தூர்வாரும் விவகாரத்தில் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடந்த சில நாட்களுகு முன்னர் பிரச்சினை இருந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவரும், எதிா்க்கட்சித்தலைவருமான ஸ்டாலின் இன்று அந்த ஏாியை பார்வையிட இன்று வருவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் ஸ்டாலின் வருகைக்கு அதிமுகவினர் கடும் எதிா்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பிரச்சினை சற்று மோசமான நிலையில் அப்பகுதியில் காவல்துறையினாின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஏற்கனவே அறிவித்திருந்த படி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் சேலம் சென்றார்
இந்த நிலையில் ஸ்டாலின் காரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு ஏாியை பார்வையிட உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தொிவித்தனர். இதனை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் தொடர்ந்து ஏாியை பார்வையிட செல்ல முயன்றனர். இந்த நிலையில் காவல் துறையினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஸ்டாலினை கைது செய்த காவல் துறையினர் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் குவிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மிகவும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இத்தகவல் அறிந்த தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.