வரதட்சணை புகாரா? உடனடி கைது கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
வரதட்சணை வழக்கில் உடனடி கைது கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் திருமண பந்தம் உருவாக்கப்படும் போது, வரதட்சணையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இதன் கொடுமை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதிலிருந்து பெண்களை காப்பாற்ற வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்கும் போது, உடனடியாக கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இதற்கிடையில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, வரதட்சணை தொடர்பான வழக்குகளில் யாரையும் உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதற்காக உரிய விசாரணை நடத்தப்பட்டு, காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப நல கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை பெறப்பட வேண்டும். இதையடுத்தே கைது செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.