பீகார் நிலை தமிழகத்திற்கு வருமா?

பீகார் நிலை தமிழகத்திற்கு வருமா?

ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் சமீபத்தில் ஜிஎஸ்டி அறிமுகம் ஆனது போல் ஒரே நாடு ஒரே கட்சியின் ஆட்சி என்ற நிலையை கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கிட்டத்தட்ட வட மாநிலங்கள் அனைத்திலும் ஆட்சியை பிடித்துவிட்ட பாஜகவின் அடுத்த குறி தமிழ்நாடு மற்றும் டெல்லி என்று கூறப்படுகிறது

டெல்லியில் ஏற்கனவே 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இவர்களது நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. தேர்தல் கமிஷனும் கைவிரித்து விட்ட நிலையில், சட்டசபை தானாக கவிழும், மீண்டும் தேர்தல் வரும் அப்போது தாமரையை மலரச் செய்யலாம் என்பது பாஜகவின் திட்டம்.

சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவினர் அனைவரையும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ஒருங்கிணைத்து வருகிறார். மேலும், ஆம் ஆத்மி கட்சிக்குள் நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் தானாகவே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறி ஆட்சி கவிழும் என்பது பாஜகவின் திட்டம்.

இந்த நிலையில் அமித்ஷாவின் அடுத்த குறி தமிழ்நாடு தான். இங்கு கிட்டத்தட்ட பீகார் நிலையை கொண்டு வர பாஜக முடிவு செய்துவிட்டதாகவும், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல்வர் அதிமுகவின் தலைவராக ஒருவர் இருந்தாலும், துணை முதல்வராக பாஜக இருக்கும் நிலை வரும் என்று கூறப்படுகிறது

Leave a Reply