குட்டை பாவாடை எங்கள் உரிமை: துருக்கியில் பெண்கள் போராட்டம்
துருக்கி நாட்டில் சமீபத்தில் பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு கொண்டு வந்த நிலையில் இதற்கு பெண்கள் தரப்பினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று நடந்த பிரமாண்டமான பேரணியில், ‘எங்களுடைய ஆடை விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம், எங்கள் ஆடை எங்கள் உரிமை’ என்ற கோஷத்துடன் ஏராளமான பெண்கள் சென்றனர்.
கடந்த மாதம் குட்டை பாவாடை அணிந்து சென்றதற்காக பெண் ஒருவர் மீது பொது இடத்தில் ஆண்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் துருக்கி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குட்டைப்பாவாடை எங்கள் உரிமை, அதில் யாரும் தலையிட வேண்டாம் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கூறினார்.