எம்பிபிஎஸ் சீட் கிடைக்கலையா? இதோ இருக்குது மாற்று படிப்புகள்

எம்பிபிஎஸ் சீட் கிடைக்கலையா? இதோ இருக்குது மாற்று படிப்புகள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன… இருக்கவே இருக்கு மாற்று மருத்துவப் படிப்புகள்! மருத்துவம், எத்தனையோ பேரின் கனவு, லட்சியம். ஆனால், நீட் (NEET) தேர்வு, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களை அல்லாடவைத்துவிட்டது என்பதே யதார்த்தம். இந்த ஓர் ஆண்டுக்காவது நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும் என்கிற குரல்கள் எழுந்திருக்கின்றன. தமிழக அரசு இதற்காக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. எம்.பி.பி.எஸ். (M.B.B.S.,), பி.டி.எஸ் (B.D.S) படிப்புகள் தவிர, மற்ற மருத்துவப் படிப்புகளுக்கும் அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வு கட்டாயம் என்கிற நிலையும் உருவாகியிருக்கிறது.

மருத்துவப் படிப்புகள்

மாற்று மருத்துவப் படிப்புகளான சித்த மருத்துவம், இயற்கை மற்றும் யோகா, ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, யுனானி ஆகியவற்றுக்கும் இன்று மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. இந்த இளநிலை மருத்துவப் படிப்புகள் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு இணையானவை. இந்தப் படிப்புகளை எங்கே படிக்கலாம், மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் உள்ளன, கல்லூரிகள் எங்கே இருக்கின்றன, எப்படி விண்ணப்பம் செய்வது போன்றவற்றை விரிவாகப் பார்க்கலாம்…

மருத்துவப் படிப்புகள்…
சித்த மருத்துவம் (B.S.M.S – Bachelor of Siddha Medicine and Surgery)
இயற்கை மற்றும் யோகா – (B.N.Y.S – Bachelor of Naturopathy and Yogic Science)
இந்த இரண்டையும், `தமிழ் மருத்துவப் படிப்புகள்’ என்று சொல்வார்கள்.
ஆயுர்வேத மருத்துவம் – (B.A.M.S -Bachelor of Ayurvedic Medicine and Surgery) இதை, `இந்திய மருத்துவப் படிப்பு’ என்பார்கள்.
ஹோமியோபதி – (B.H.M.S – Bachelor of Homeopathy and Surgery) இதை `ஜெர்மானிய மருத்துவப் படிப்பு’ என்கிறார்கள்.
யுனானி – (B.U.M.S – Bachelor of Unani Medicine and Surgery) இதை `அராபிய மருத்துவப் படிப்பு’ என்கிறார்கள்.

மருத்துவம்

ஹோமியோபதி (B.H.M.S)
அரசுக்கல்லூரி -1
தனியார் கல்லூரி – 9

கல்லூரி – ஊர் – மொத்த இடங்கள்:
அரசு ஹோமியோபதி காலேஜ் & ஹாஸ்பிடல் – மதுரை – 50 இடங்கள்.
ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – கன்னியாகுமாரி – 50 இடங்கள்.
வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – போரூர், சென்னை – 100 இடங்கள்.
டாக்டர் ஹெனிமான் (Hahnemann) ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – நாமக்கல் – 50 இடங்கள்.
சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – கன்னியாகுமாரி – 100 இடங்கள்.
மார்ட்டின் ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – கோயம்புத்தூர் – 50 இடங்கள்.

ஸ்ரீசாய்ராம் ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – தாம்பரம், சென்னை – 50 இடங்கள்.
ஆர்.வி.எஸ் ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – கோயம்புத்தூர் – 50 இடங்கள்.
சிவராஜ் ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – சேலம் – 50 இடங்கள்.
மரியா ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – கன்னியாகுமரி – 60 இடங்கள்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
விநாயகா மிஷன் ஹோமியோபதி மெடிக்கல் காலேஜ் – சேலம் – மொத்த இடங்கள்- 50.
************
ஆயுர்வேதம் – B.A.M.S
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி – 1
தனியார் கல்லூரி – 6

கல்லூரி – ஊர் – மொத்த இடங்கள்:
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை – நாகர்கோவில் – 60 இடங்கள்.
ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் – 40 இடங்கள்.
வெங்கட்ரமணா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி – சென்னை – 30 இடங்கள்.
தர்மா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி – சென்னை – 40 இடங்கள்.
ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அண்ட் ரிசர்ச் சென்டர் – சென்னை – 50 – இடங்கள்.
ஸ்ரீ சங்கரா காலேஜ் ஆஃப் ஆயுர்வேதா – சென்னை – 40 இடங்கள்.
மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி – கன்னியாகுமரி – 60 இடங்கள்.

சித்த மருத்துவம் – B.S.M.S
அரசு சித்த மருத்துவக் கல்லூரி – 2
தனியார் கல்லூரி – 6.

கல்லூரி – ஊர் – மொத்த இடங்கள்:
அரசு சித்த மருத்துவக் கல்லூரி – பாளையங்கோட்டை – 100 – இடங்கள்.
அரசு சித்த மருத்துவக் கல்லூரி – சென்னை – 60 இடங்கள்.
அகிலா திருவிதாங்கூர் சித்த வைத்திய கல்லூரி – கன்னியாகுமரி – 40 இடங்கள்.
ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி – ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் – 50 இடங்கள்.
வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரி – ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் – 40 இடங்கள்.
ஆர்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரி – கோயம்பத்தூர் – 30 இடங்கள்.
சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி – சேலம் – 50 இடங்கள்.
மரியா சித்த மருத்துவக் கல்லூரி – கன்னியாகுமரி – 100 இடங்கள்.

*********
யுனானி – B.U.M.S
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி – சென்னை – மொத்த இடங்கள் – 60.

********
இயற்கை மற்றும் யோகா – B.N.Y.S
அரசு கல்லூரி -1
தனியார் கல்லூரி -3.
கல்லூரி – ஊர் – மொத்த இடங்கள்

அரசு யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி – சென்னை – 60 இடங்கள்.
ஜெ.எஸ்.எஸ்.யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி – கோயம்புத்தூர் – 100 இடங்கள்.
சிவராஜ் யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி – சேலம் – 40 இடங்கள்.
ஸ்ரீ ராமச்சந்திரா யோகா அண்ட் நேச்சுரோபதி கல்லூரி – சென்னை – 100 இடங்கள்.

சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்றன. ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம் மற்றும் கோட்டார் அரசு இந்திய மருத்துவக் கல்லூரி முதல்வரிடமிருந்து அலுவலக நாள்களில் பெறலாம்.

பொதுப் பிரிவுக்கு ரூபாய் 500, சிறப்புப் பிரிவுக்கு ரூபாய் 100, விண்ணப்பக் கட்டணம். பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

 

Leave a Reply