ஓவியா பொய் சொல்லவே மாட்டா! ஆரவ் பெருமிதம்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி குறித்துதான் தற்போது அனைத்து இடங்களிலும் பேச்சு. குறிப்பாக நெட்டிசன்கள் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியாதான். ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை என அவரது பெயரில் திடீர் திடீரென பல இயக்கங்கள் தோன்றிவிட்டன
இந்த நிலையில் ஓவியா குறித்து நேற்று ஆரவ், சினேகன் மற்றும் வையாபுரி பேசிக்கொண்டிருந்தபோது, ‘ ‘ஓவியாவுக்கு ஒரு பரந்த மனசு இருக்கின்றது. உண்மையிலேயே ரொம்ப உண்மையா பொண்ணு. அவகிட்ட என்னதான் பொய்யை சொல்ல சொன்னாலும் அவ சொல்லவே மாட்டா. ஒருநாள் கண்ணை கட்டி கேம் விளையாடும்போது எனக்கு கொஞ்சம் கண் நன்றாக தெரிந்தது. நான் ஓவியாவிடம் கண் நல்லா தெரியுது, அதை யூஸ் பண்ணிக்கோ என்று சொன்னபோது, ‘அதெல்லாம் முடியாது நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்ன்னு சொன்னா. உண்மையா இருப்பது தான் ஓவியாவின் குணம் என்று கூறினார்.
மேலும் சினேகன் கூறியபோது, ‘அடிபட்டு அடிபட்டு ரொம்ப நொந்து போயிருக்கா, எப்படி வெடிப்பா? எப்ப மூட் அவுட் ஆவான்னு சொல்லவே முடியாது. ஆனால் ஒரு நல்ல பார்ட்னர் கிடைத்து கல்யாணம் ஆயிட்ட டோட்டலா சேஞ்ச் ஆயிருவா, அவளோட மொத்த அன்பையும் அவரிடம் கொட்டிவிடுவார்’ என்று கூறினார்ல்