சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா சீராய்வு மனு இன்று விசாரணை !
சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இவர்களை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்து நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் அடங்கிய பெஞ்ச் கடந்த பிப்ரவரி 14ல் தீர்ப்பளித்தது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்து உத்தரவிடப்பட்டது.
இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மறு சீராய்வு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.இதை நீதிபதி அமித்வராய், நாரிமன் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது.