பிளாஸ்டிக் பயன்பாடு: டெல்லி மாநில அரசுக்கு எச்சரிக்கை!
தடையை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதையடுத்து டில்லி அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். கடந்த, ஜனவரி 1ல், என்சிஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றில், பயன்படுத்தி துாக்கி எறியத்தக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
பிளாஸ்டிக் குப்பைகளை போடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், தொடர்வது அங்கு பிளாஸ்டிக் குறித்து வழக்கு, நீதிபதி, சுதந்திர குமார் தலைமையிலான, தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை, முழுமையாக அமல்படுத்தப்படாதது ஏன்?’ என, கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், தடையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.
இதையடுத்து பிளாஸ்டிக் மீதான தடையை முழுமையாக அமல்படுத்தி, குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும், தவிர, குப்பைகளை போடுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.