கமல்ஹாசனின் டுவீட்டுக்கு என்ன அர்த்தம்! புரியாத புதிர்

கமல்ஹாசனின் டுவீட்டுக்கு என்ன அர்த்தம்! புரியாத புதிர்

நடிகர் கமல்ஹாசன் படங்களும் சரி, பேச்சுகளும் சரி, பேட்டியும் சரி உற்று கவனித்தால்தான் புரியும். ஆழ்ந்த கருத்துக்களை அனைவரும் பயன்படுத்தும் சாதாரண தமிழில் கூற மாட்டார். தனது தமிழ் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் சுத்ததமிழில்தான் கூறுவார். அது மற்றவர்களுக்கு புரியுமா? புரியாதா? என்பது குறித்து கவலைப்படவும் மாட்டார்.

அந்த வகையில் இன்று அவர் தனது டுவிட்டரில், ‘முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை; பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா? என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் அனைவருக்கும் புரியுமா என்பது அவருக்கே சந்தேகமாக இருந்ததால் கடைசியில் புரிந்ததா? என்றும் கேட்டுள்ளார்

இந்த டுவீட்டில் முதலில் வரும் டாக்டர் யாரை குறிக்கின்றது என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் மிக சீரியசாக ஓடிக்கொண்டிருக்கின்றது. டாக்டர் அன்புமணி, டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், டாக்டர் அப்துல்கலாம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறி வருகின்றனர். அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது அவரே விளக்கினால் தவிர இந்த பிரச்சனைக்கு முடிவில்லை

Leave a Reply