குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா உறுதி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா உறுதி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

குஜராத் மாநில மக்கள் மழை வெள்ளத்தால் ஒருபுறம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு புறம் அம்மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் மேலிடம் தங்க வைத்துள்ளது.

கட்சி மாறி ஓட்டு போடுவதை தவிர்க்கவே இவ்வாறு எம்.எல்.ஏக்களை தங்க வைப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா முறை செயல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ”நோட்டா முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. திடீரென தற்போது மட்டும் ஏன் காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்கிறது. நோட்டாவுக்கு தடை கிடையாது” என்று இன்று தீர்ப்பளித்தது. இந்த மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply