இந்த மாதம் தொடர் விடுமுறை எதிரொலி: வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்
இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் இரண்டு முறை தொடர் விடுமுறை வருவதால் வங்கி பணிகள் பாதிப்பு அடைவதோடு, ஏடிஎம் முடங்கும் அபாயம உள்ளது.
வரும் 12ஆம் தேதி 2வது சனிக்கிழமை, 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது.
அதேபோல் இந்த மாத இறுதியில் மறுபடியும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ம் தேதி 4வது சனிக்கிழமை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள். இந்த நாட்களில் வங்கி ஏடிஎம் முடங்கும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே அவசர தேவைகளுக்கு பணம் எடுத்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.