சென்னை – திருவனந்தபுரம் நீா்வழிச்சாலைக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு

சென்னை – திருவனந்தபுரம் நீா்வழிச்சாலைக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு

சென்னை முதல் திருவனந்தபுரம் வரை 800 கோடி ரூபாய் மதிப்பில் நீா்வழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் பொன்.ராதா கிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.

மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில் தமிழகத்தில் ஓாிரு மாதங்களில் இரண்டு இரட்டை அகல ரயில் பாதைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் சென்னை முதல் கன்னியாகுமாி வரை உள்ள கடற்கரை சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற தயாராக உள்ளது.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் தற்போது வழக்கமான மதுரை, திருச்சி வழியாக செல்லும் வாகனங்களில் 60 சதவீத வாகனங்கள் புதிய சாலையை பயன்படுத்த வாய்புள்ளது. மேலும் அந்த சாலையில் தான் அதிகமான சுற்றுளா, வழிபாட்டு தளங்கள் உள்ளன. இந்த திட்டத்திற்கு முதல்வா் விரைவில் ஒப்புதல் அளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ராமநாதபுரம், காரைக்குடி, தூத்துக்குடி, கன்னியாகுமாியை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சென்னை – திருவனந்தபுரம் நீா்வழிச்சாலை அமைக்க 800 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் திருவனந்தபுரம் சாலை, ரயில், நீா்வழிப்பாதை மூலம் இணைக்கப்படும் என்றும் அவா் தொிவித்தாா்.

Leave a Reply