கர்நாடக அமைச்சர் ஷிவ்குமார் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம்?
குஜராத் எம்.எல்.ஏக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. மாநிலங்களவை தேர்தலில் எம்.எல்.ஏக்கள் விலை போவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்காக கர்நாடக அமைச்சர் ஷிவ்குமார் வீட்டில் கோடி கோடியாய் பணம் இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து அவரது வீட்டில் வருமானவரித்துறையில் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் ஷிவ்குமார் வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், அவைகளில் பெரும்பாலானவை புதிய ரூ.2000 நோட்டு என்றும் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்று வீடியோ வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த வீடியோ கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறையினர்களின் ரெய்டின்போது எடுக்கப்பட்டது என்றும் வேண்டுமென்றே அந்த தனியார் சேனல் பொய்யான செய்தியை பரப்பி வருவதாகவும் சமூக வலைத்தள பயனாளிகள் ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.