சந்திரபாபு நாயுடுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: ஜெகன்மோகன் ரெட்டி பேச்சால் பரபரப்பு
கடந்த பல ஆண்டுகளாகவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் நேற்று இடைத்தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைப் போன்றவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நந்தியால் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டபோது ஜகன்மோகன் இதைப் பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம்சாட்டி இதை ஜகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது ஆந்திர காவல் துறையிடம் தெலுங்கு தேசக் கட்சி தரப்பில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜகன் மோகனின் பேச்சுக்கு தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.