சீட் பெல்ட்டில் டேக் நம்பர் இல்லை; ஏர் இந்தியா விமானம் புறப்பட அமெரிக்காவில் மறுப்பு…!

சீட் பெல்ட்டில் டேக் நம்பர் இல்லை; ஏர் இந்தியா விமானம் புறப்பட அமெரிக்காவில் மறுப்பு…!

சீட் பெல்ட்டில் டேக் நம்பர் இல்லாததால், ஏர் இந்தியா விமானம் புறப்பட அமெரிக்காவில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியாவின் போயிங்-777(VT-ALK) விமானம் தயாராக இருந்தது. அப்போது பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் திடீர் சோதனை நடத்தியது.

அப்போது விமானத்தில் தொழில்நுட்ப தர நிர்ணய எண் சீட் பெல்ட்களில் இல்லாதது கண்டறியப்பட்டது. இது பாதுகாப்பு அம்ச பிரச்னை இல்லையென்றாலும், விமானம் புறப்பட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து நியூயார்க் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு போயிங்-777(VT-ALJ) விமானத்திற்கு டெல்டா விமானம் மூலம் விமான ஊழியர்கள் புறப்பட்டனர்.

அந்த விமானத்தில் இருந்த சீட் பெல்ட்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் சிகாகோ வந்தனர். இதையடுத்து போயிங்-777(VT-ALK) விமானத்தில் சீட் பெல்ட்களை மாற்றினர்.

342 இருக்கைகள் கொண்ட ஏர் இந்தியா போயிங்-777 விமானம், 8 மணி நேர கால தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. இருப்பினும் டேக் எண் இல்லாத 44 பயணிகள் இருக்கை மற்றும் 12 விமான ஊழியர்கள் இருக்கைகள் பயன்பாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் ஏர் இந்தியாவின் வேண்டுகோளை பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் ஏற்காததால், அந்நிறுவனம் அதிருப்தி அடைந்தது.

Leave a Reply