ஸ்டார் ஓட்டல் சிறையில் இருந்து விடுதலையான எம்.எல்.ஏக்கள்
குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடந்த சில நாட்களாக பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை மாநிலங்களவை தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து இன்று பெங்களூரில் இருந்து கிளம்பி குஜராத் சென்றடைந்தனர்.
அமித் ஷா, அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அகமது பட்டேல் ஆகிய மூவரும் மாநிலங்களை தேர்தலில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவிடம் விலை போய்விடக்கூடாது என்பதற்காக சொகுசு சிறையில் இத்தனை நாள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர்கள் அந்த சிறையில் இருந்து விடுதலையாகினர்.
இன்னும் சற்று நேரத்தில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் எம்எல்ஏக்களைச் சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.