வெற்றி பெற்றது கூவத்தூர் பாணி. அகமது பட்டேல் வெற்றி

வெற்றி பெற்றது கூவத்தூர் பாணி. அகமது பட்டேல் வெற்றி

தமிழகத்தின் எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்து வெற்றிகரமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகியது போல் குஜராத் எம்.எல்.ஏக்களை பெங்களூர் சொகுசு விடுதியில் அடைத்து வைத்து காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.

குஜராத் மாநிலத்தில் காலியாக் இருந்த 3 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசியத் தலைவரான அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல, காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென பாஜக சார்பில் பல்விந்த்சிங் 3வது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் அகமது பட்டேலின் வெற்றி கேள்விக்குறி ஆனது.

எனவே எம்.எல்.ஏக்கள் அணி மாறி வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய காங்கிரஸ் மேலிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக, பெங்களூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் அகமது பட்டேல் வெற்றி பெற்றார். இருப்பினும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணி மாறி வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply