ஓவியா இடத்தில் ப்ரியா? தேறுமா பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு குறைந்து வரும் நிலையில் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் சுத்தமாக படுத்துவிட்டது. எனவே இன்னும் மீதியிருக்கும் 50 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சியை இழுத்து கொண்டு செல்ல ஓவியா அல்லது வேறு யாராவது பிரபலம் தேவை என்ற கட்டாயத்தில் இந்த நிகழ்ச்சி உள்ளது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் நாயகி பிரியாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி செல்வார் என்றும் கூறப்படுகிறது.
சீரியலில் பிரபலமாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள மலைமுழுங்கிகளை ப்ரியா சமாளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்