தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் திடீர் ரத்து: ஓபிஎஸ் திட்டம் என்ன?
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைக்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றும், சென்னையில் வருகிற 18-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அணி அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த போராட்டம் கடந்த 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுக்கோட்டையில் வருகிற 19-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதால் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் முயற்சி நடந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது இணைப்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.