ஊடகங்களுக்கு முன்பே அப்டேட் செய்த கமல்
கடந்த சில நாட்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் ஊடகங்களை விட மிக வேகமாக பிரேக்கிங் செய்திகளை தனது டுவிட்டரில் அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த செய்தி வெளியாகி ஒருசில நிமிடங்களில் கமல் தனது டுவிட்டரில் இந்த செய்தியை அப்டேட் செய்துவிட்டார்.
அவர் தனது டுவிட்டரில் ”நன்றி NEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே. இனி என்ன செய்வோம்? என்று பதிவு செய்துள்ளார்.
இந்திய அளவில் உள்ள முன்னணி ஊடகங்களே இதுகுறித்த பிரேக்கிங் நியூஸ் ஒளிபரப்பு செய்வதற்கு முன்பே கமல் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவரது அப்டேட் வேகத்தை கண்டு அனைவரும் அதிசயித்தனர். இது எப்படி சாத்தியமாயிற்று என்பது ஊடகங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு புரியாத புதிராக உள்ளது.