அகதிகள் திரும்புவதற்கு வசதியாக இலங்கைக்கு மீண்டும் படகுப் போக்குவரத்து

அகதிகள் திரும்புவதற்கு வசதியாக இலங்கைக்கு மீண்டும் படகுப் போக்குவரத்து

தூத்துக்குடி கொழும்புக்கு இடையே மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என தமிழக அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு திரும்ப விரும்பும் தமிழ் அகதிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு தூத்துக்குடி-கொழும்பு இடையே தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து லாபகரமான இல்லையென்று நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே உள்ள வர்த்தக ரீதியிலான தூத்துக்குடி – கொழும்பு பாதையா? அல்லது குறுகிய பாதையான ராமேஸ்வரம்- தலைமன்னார் பாதையா? என மத்திய அரசுடன் விவாதிக்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழக முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகள் பலர், தங்கள் உடைமைகளை கொண்டுச் செல்ல கப்பல் போக்குவரத்தை எதிர்பார்ப்பதாக தமிழக அரசு அகதிகள் மறுவாழ்வு மற்றும் நல்வாழ்வுத்துறையின் ஆணையர் உமாநாத் தெரிவித்துள்ளார்.

யில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் மற்றும் போரின் காரணமாக 1983ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.

Leave a Reply