டி.என்.பி.எல் போட்டி: இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி எது? இன்று பலப்பரிட்சை

டி.என்.பி.எல் போட்டி: இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி எது? இன்று பலப்பரிட்சை

8 அணிகள் பங்கேற்ற 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

இறுதிசுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் இன்றிரவு கோதாவில் இறங்குகின்றன. இந்த போட்டி நெல்லையில் நடைபெறவுள்ள்து.

6 வெற்றிகளை குவித்து அசத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் தூத்துக்குடியிடம் 114 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இருப்பினும் கிடைத்துள்ள இந்த 2-வது அரிய வாய்ப்பை பயன்படுத்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இதேபோல் தொடக்கத்தில் தடுமாறிய கோவை கிங்ஸ் அணி, கடைசி கட்டத்தில் எழுச்சி கண்டது. காயத்தில் இருந்து குணமடைந்து கேப்டன் முரளிவிஜய் வருகை தந்ததும் புத்துணர்ச்சி பெற்ற அந்த அணி கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியது. குறிப்பாக வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளை நிர்ணயித்த 194 ரன்கள் இலக்கை 19 ஓவர்களில் எட்டிப்பிடித்து வியக்க வைத்தது.

கோவை கிங்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு நிகராக வலுவாக காணப்படுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை எளிதில் கணிக்க இயலாது. என்றாலும் குறிப்பிட்ட நாளில் எந்த அணி நெருக்கடியை திறம்பட சமாளிக்கிறதோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

 

Leave a Reply