பஞ்சாப்-ஹரியானா வன்முறை வழக்கு: மத்திய அரசுக்கு நீதிபதி கண்டனம்

பஞ்சாப்-ஹரியானா வன்முறை வழக்கு: மத்திய அரசுக்கு நீதிபதி கண்டனம்

பாலியல் தொடா்பான வழக்கில் தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் குற்றவாளி என பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து குற்றவாளி ராம் ரஹீமுக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கவுள்ளது.

இந்த நிலையில் ராம்ரஹீமை குற்றவாளி என அறிவித்ததால் அவருடைய பக்தர்கள் என்ற போர்வையில் இருக்கும் சமூக விரோதிகளின் வன்முறையால் பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் வன்முறை வெடித்துள்ளது

இந்த நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த இரு மாநில அரசுகளும் தவறிவிட்டதாக வழக்கு ஒன்று பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டில் தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார். இது மாநில அரசின் பிரச்சினை என்று அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இதனால் கடுமையாக கோபமைடந்த நீதிபதி ஹரியானா இந்தியாவில் இல்லையா? ஏன் பஞ்சாப்-ஹரியானா மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர் என்றும் நீதிமன்றம் கோபம் வெளிப்படுத்தியது.

முன்னதாக மாநில அரசு மீது கருத்து தெரிவித்த நீதிபதி உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மாநிலத்தை எரிய விட்டுள்ளீஇர்கள். இந்த சம்பவத்தின் மூலம் மாநில அரசு வன்முறையாளா்களிடம் சரணடைந்து விட்டதாக தெரிவித்தார்.

Leave a Reply