ரூ.1100 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர்
கால்பந்து வீரர்கள், கிரிக்கெட் வீரர்களை விட பணமழையில் நனைவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் ஒரு கால்பந்து வீர்ர் 145 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தொகை சுமார் ரூ.1100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த லா லிகா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் நெய்மர் திடீரென விலகி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு சென்றுவிட்டதால் அவரது இழப்பை சரிக்கட்ட பார்சிலோனா அணி திட்டமிட்டது.
இந்த நிலையில் ஜெர்மனி கால்பந்து கிளப்பான பொருசியா டார்ட்மண்ட் அணியில் விளையாடும் பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெல்-ஐ 145 மில்லியன் யூரோ கொடுத்து அணியில் இணைத்துள்ளது. பார்சிலோனா கிளப் தனது வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பணம் கொடுத்து ஒரு வீரரை வாங்குவது இதுதான் முதன்முறை.