ஜிஎஸ்டியின் முதல் மாத கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

ஜிஎஸ்டியின் முதல் மாத கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

 

கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற வகையில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிவிதிப்பு முறைக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி இருந்த நிலையில் தற்போது இந்த வரியின் மூலம் முதல் மாதத்தில் எவ்வளவு வருமானம் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்த முதல் மாதமான ஜூலை மாதத்தில் ரூ.92,283 கோடி வருமானம் வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த வரிவிதிப்பின் மூலம் முதல் மாதத்தில் ரூ.91,000 கோடி வருமான இலக்கை மத்திய அரசு நிர்ணயித்து இருந்த நிலையில் இலக்கையும் தாண்டி அபார வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவ்ரை 59.57 லட்சம் வருமான வரி செலுத்த பதிவு செய்திருப்பதாகவும், அதில் 38.38 லட்சம் பேர் ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Leave a Reply