50 காவலர்கள், 10 கமாண்டோஸ் பாதுகாப்பு! யாருக்கு தெரியுமா?
சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிபிஐ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை தைரியமாக வழங்கிய நீதிபதிக்கு 50 காவலர்கள் மற்றும் 10 கமாமோட்க்கள் அடங்கிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராஹ் ரஹிம் சிங் குற்றவாளி என்று அறிவித்ததில் இருந்து தண்டனை அறிவிக்கும் வரை இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜகதீப்சிங் அவர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக நீதிபதிக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது