சினிமாவில் கோட்டை விட்ட கமல் மனகோட்டை கட்டுகிறார். தமிழிசை
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியல் பேசிவரும் நிலையில் நேற்று கோவையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ‘கோட்டையை நோக்கி நமது பயணம் செல்லும் நேரம் வந்துவிட்டது என்றும், டுவிட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன! தொடங்கியது தொடங்கியதுதான் என்று ஆவேசமாக பேசினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழிசை செளந்திரராஜன், ‘சினிமாவில் கோட்டை விட்டவர்கள், கோட்டையை பிடிக்கலாம் என மனக்கோட்டை கட்டுகிறார்கள். கமல் கட்டும் மனக்கோட்டை டுவிட்டரில் கட்டினால் என்ன? கோவையில் கட்டினால் என்ன? என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கமல் என்ன கூறினாலும் அதற்கு பாஜகவினர் எதிரடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.