6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வருமான வரித்துறை அதிகாரி

6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வருமான வரித்துறை அதிகாரி

பெங்களூரு வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 53 வயது அதிகாரி ஒருவர் நேற்று முன் தினம் திடீரென அலுவலகத்தின் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் அவராகவே ஆறாவது மாடியின் ஜன்னலை திறந்து கீழே குதித்துள்ளதால் இது தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

35 வருடங்களாக வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply