புளூவேல் கேம்: அரசை முந்திக்கொண்ட மதுரை ஐகோர்ட்

புளூவேல் கேம்: அரசை முந்திக்கொண்ட மதுரை ஐகோர்ட்

புளூவேல் கேம் விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் மதுரையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மதுரை ஐகோர்ட் தாமாகவே முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.

புளூவேல் என்ற ஆபத்தான ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து வரும் நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது மதுரை ஐகோர்ட் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்ததற்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply