கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் தடை செய்துள்ளது. இதனாப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ..என்.எக்ஸ் மீடியாவுக்கு முறைகேடாக நிதி பெற்றது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்இன் விசாரணை இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. சமிபத்தில் பதவியேற்று கொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் இன்று ஆஜரானார்.

அப்போது, கடந்த 23 மற்றும் 28ம் தேதிகளில் சிபிஐ முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜரானதாக தெரிவித்தார். இந்த வழக்கிற்கு கார்த்தி சிதம்பரம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பணி நிமித்தம் காரணமாக கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லவும் வழக்கறிஞர் அனுமதிக்க கோரினார்.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply