டிடிவி தினகரன் அணியில் மேலும் 2 எம்பிக்கள்
தினகரன் அணியில் ஏற்கனவே 19 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்பட்டு வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று இரண்டு எம்பிக்கள் தினகரன் அணிக்கு ஆதரவு கொடுத்திருப்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீட்டிற்கு வேலூர் எம்.பி., செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் எம்.பி உதயகுமாரும் என்று அவரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தினகரன் அணிக்கு ஏற்கனவே 6 எம்.பிக்கள் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஓரிரு எம்.பி.,க்கள் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.