கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தில் விக்ரம்பிரபு

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தில் விக்ரம்பிரபு

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த ‘அரிமா நம்பி’ என்ற வெற்றி படத்தில் நடித்த விக்ரம்பிரபு மீண்டும் அவருடைய தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கத்திக்கப்பல்’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கவுள்ள இந்த படம் ஒரு த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கொண்ட படமாம்

விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து விக்ரம்பிரபு பேட்டி ஒன்றில் கூறுகையில், அரிமாநம்பி’ போன்ற படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று பலர் என்னிடம் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதிலாக இந்த படம் இருக்கும். மேலும் இந்த படத்தின் கதை அனைத்து தரப்பினர்களுக்கும் குறிப்பாக ‘பி’ மற்றும் ‘சி’ ஆடியன்ஸ்களுக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என்று கூறினார்.

 

Leave a Reply