இன்றைய ராசிபலன்கள் 08/09/2017
மேஷம்
கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள் ரிஷபம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள் மிதுனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள் கடகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி குணங்கள் சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள் கன்னி
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ராசி குணங்கள் துலாம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசி குணங்கள் விருச்சிகம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி குணங்கள் தனுசு
எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள் மகரம்
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள் கும்பம்
இங்கிதமாகப் பேசி கடினமாக காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள் மீனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையலால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்