அடுத்த அஸ்திரம் ஆட்சிக்கு வாபஸ்: தினகரன் அதிரடி

அடுத்த அஸ்திரம் ஆட்சிக்கு வாபஸ்: தினகரன் அதிரடி

இன்று அதிமுக பொதுக்குழு கூடவுள்ள நிலையில், பொதுக்குழுவிற்கு தடை வாங்க தினகரன் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. சென்னை ஐகோர்ட்டும் அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க அனுமதி மறுத்துவிட்டது.

இந்த நிலையில் தினகரனுக்கு தற்போது இரண்டே வழிகள் தான் உள்ளது. ஒன்று ஸ்டாலினுக்கு ஆதரவு கொடுத்து அவரை முதலமைச்சர் ஆக்குவது. அல்லது எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்ப்பது.

ஆனால் இன்னும் 4 ஆண்டுகள் பதவி இருக்கும் நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் இதற்கு சம்மதிப்பார்களா? என்று தெரியவில்லை. ஏனெனில் அடுத்தமுறை எம்.எல்.ஏ சீட் கிடைப்பதும் உறுதியல்ல, அப்படியே சீட் கிடைத்தாலும் வெற்றி பெறுவது என்பது எட்டாக்கனி

இந்த நிலையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் உறுதி என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply