கேரள பெண்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ள கோவை இளைஞர்களின் ஜிமிக்கி கம்மல் வீடியோ

கேரள பெண்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ள கோவை இளைஞர்களின் ஜிமிக்கி கம்மல் வீடியோ

சமீபத்தில் நடந்த ஓணம் திருவிழாவின் போது கேரள ஆசிரியைகள் மற்றும் மாணவிகளின் நடனத்தில் உருவான ஜிமிக்கி கம்மல் பாடல் இணையதளங்களில் கடந்த ஒரு வாரமாக வைரலாகி வருகிறது. இந்த குழுவில் ஆடிய ஆசிரியை ஷெரிலுக்கு கேரள, தமிழக திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் கேரள பெண்களின் நடனத்திற்கு எந்தவிதத்திலும் நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அதே ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கோவையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் ஆடிய நடன வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து இளைஞர்கள் ஆடியுள்ள நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளதால் இந்த வீடியோ வெளிவந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ:

Leave a Reply