தினகரன் அணியின் ஒரு விக்கெட் வீழ்ந்தது. ரிசார்ட்டில் இருந்து வெளியேற ஒரு எம்.எல்.ஏ முடிவு?
தினகரன் அணி ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த குடகில் ரிசார்ட்டில் சற்றுமுன் தமிழக போலீசார் சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு எம்.எல்.ஏ போலிசாருடன் ரிசார்ட்டில் இருந்து வெளியேற சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் தினகரன் அணியின் ஒரு விக்கெட் வீழ்ந்துவிட்டதாக கருதப்படுகிறது. இன்னும் நான்கு வருடங்களுக்கு கண்டிப்பாக ஆட்சி கலைய வாய்ப்பில்லை என்ற நிலையில் எடப்பாடி அணியில் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு என்ற மனநிலைக்கு தற்போது அனைத்து எம்.எல்.ஏக்களும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சசிகலா-தினகரன் அணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றாலும் வேறொரு ஆதரவுக்காக இதுவரை இருந்த எம்.எல்.ஏக்களின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாகவும் கூறப்படுகிறது