செப்டம்பர் 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

செப்டம்பர் 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை முதல் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் அணியில் இருந்து ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை தொடங்கிவிட்டதாகவும், சபாநாயகர் எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடினார்.

இந்த நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை வரும் 20ஆம் தேதி வரை நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply