உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று இல்லை? என்ன சிக்கல்?
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்றுக்குள் அதாவது செப்டம்பர் 18க்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
1996ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட வார்டு வரைமுறைப்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டுமா என்பதில் குழப்பம் உள்ளதாகவும், இதை ஐகோர்ட் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இரட்டை இலை கிடைக்கும் வரை உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த முன்வராது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.