18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: திமுகவுக்கு சாதகமா?

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: திமுகவுக்கு சாதகமா?

சபாநாயகரிடம் நேரில் ஆஜராகாததால் இன்று காலை 18 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி 18 தொகுதிகளும் காலி என்று தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் 18 தொகுதிகளும் காலி என்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு இடைத்தேர்தல் வைத்தால் திமுகவுக்கு கொண்டாட்டம் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் உள்பட 19 தொகுதிகளும் திமுகவுக்கு ஆதரவாக முடிவு இருக்குமானால் ஏற்கனவே உள்ள 98 எம்.எல்.ஏக்களுடன் இந்த 19ம் சேர்ந்தால் 117 என்ற எண்ணிக்கை கிடைத்து விடும். கருணாஸ் உள்பட 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply