காவிரி மேலாண்மை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
அரசாணை பிறப்பித்தப் பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி நீர் பங்கீடுதல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிரத்து தமிழ்நாடு, கர்நாடக, கேரள ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கல் தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடினர்.
அப்போது, காவிரி பிரச்னைகைளப் பொறுத்தவரை, அது இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னை என்பதால், இதற்கு நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் என்றும், தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை முடிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு தான் உள்ளதென்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வழக்கு விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், 2013 ம் ஆண்டு அரசாணை பிறப்பித்த பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்து வருவது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாக உள்ளதென்று கண்டனம் தெரிவித்துள்ளது.