32 வருடத்திற்கு பின்னர் அதே நாளில் நிலநடுக்கம். அதிர்ச்சியில் மெக்சிகோ மக்கள்

32 வருடத்திற்கு பின்னர் அதே நாளில் நிலநடுக்கம். அதிர்ச்சியில் மெக்சிகோ மக்கள்

கடந்த 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 10ஆயிரம் பேர் பலியாகினர்.

இந்த நிலநடுக்கத்தில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மெக்சிகோவில் பல மாநிலங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடந்த ஒருசில மணி நேரத்தில் மெக்சிகோவில் பல மாவட்டங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1ஆக இருப்பதால் சேதம், அதிகம் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை வெளியான தகவல்கலில் இருந்து சுமார் 119 பேர் பலியாகியிருப்பதாகவும் இடிபாடிகல் இன்னும் அதிகளவில் மீட்கப்படவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

32 வருடத்திற்கு பின்னர் அதே நாளில் அதே இடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ஒருவிதமான அச்சத்தை அப்பகுதி மக்களுக்கு இயற்கை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply