ஆதார் கார்டு இருந்தால்தான் ‘பப்’புக்கு போக முடியும். தெலுங்கான அரசு உத்தரவு

ஆதார் கார்டு இருந்தால்தான் ‘பப்’புக்கு போக முடியும். தெலுங்கான அரசு உத்தரவு

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அவசியம் என்று மத்திய மாநில அரசுகள் கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஆதார் கார்டுடன் வங்கி கணக்கு, மொபைல் எண், ரேசன் கார்டு, பான் கார்டு உள்பட பல ஆவணங்கள் இணைப்பது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் டிரைவிங் லைசென்ஸ் உள்பட இன்னும் ஒருசில ஆவணங்களும் இணைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

போகிற போக்கை பார்த்தால் இனி சாலையில் நடந்து செல்வதற்கு கூட ஆதார் அட்டை தேவை என்ற நிலை ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தெலுங்கானா மாநில அரசு இனிமேல் ஐதராபாத்தில் உள்ள ‘பப்’புக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கண்டிப்பாக நுழைவு வாயிலில் காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து பப் உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பப்’புக்குள் செல்வது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது

மேலும் பப் நிர்வாகிகள் இதற்கென ஒரு ரிஜிஸ்தரை மெயிண்டன் செய்து ஒவ்வொரு நாளும் பப்புக்கு வருபவர்களின் பெயர் மற்றும் ஆதார் அட்டை விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply