குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: மியான்மரில் பரிதாபம்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: மியான்மரில் பரிதாபம்

இனப்படுகொலையில் இருந்து தப்பித்த கர்ப்பிணி பெண், அகதிகள் முகாமில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு, எதிரான இனப்படுகொலையில், 4 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் காக்ஸ் பஜார் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த கர்ப்பிணி பெண், குடிப்பதற்கு தண்ணீரும், சரியான சிகிச்சையும் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

ஒவ்வொரு இனப்படுகொலையின் போதும் ஏதாவது ஒரு மரணம் உலக மக்களின் நெஞ்சை பதற வைக்கும். அந்த வகையில் இதுவரை பெரும்பாலும் குழந்தையின் மரணங்களை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கர்ப்பிணி பெண் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹிங்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கொடூரத்தின் தீவிரத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இந்த பரிதாப மரணம் இருக்கிறது.

Leave a Reply