புல்லட் ரயில் நமக்கு தேவையா? நெட்டிசன்களின் கிண்டல்கள்

புல்லட் ரயில் நமக்கு தேவையா? நெட்டிசன்களின் கிண்டல்கள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 14ம் தேதி நடந்த அடிக்கல் நாட்டு விழாவின் போது பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் புல்லட் ரயில்களுக்கான அடிக்கல் நாட்டினர்.

அகமதாபாத் முதல் மும்பை வரையிலான புல்லட் ரயில் திட்டம் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு ஜப்பான் உதவியாக இருந்தது மகிழ்ச்சியளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், இதன் மூலம் பயண நேரம் குறைக்கப்படும் என்றும், ஜப்பான் நாட்டின் கடனுதவியுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழையில் ஒரு ரயிலில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஓட்டுனர் அமரும் அறையில் தான் ஒழுகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குடை பிடித்தபடியே ரயிலை இயக்கி வருகிறார் அந்த ஓட்டுனர்.

தற்போது குடை பிடித்த படி ரயிலை ஓட்டும் ஓட்டுனரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக நெட்டிசன்கள் தாறுமாறாக கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். மோடி ஜி அவர்களே எங்களுக்கு புல்லர் ரயில் சேவையெல்லாம் தேவையில்லைங்கோ. முதல்ல இந்த ஓட்ட உடசல் ரயில்களை சரி செய்து கொடுத்தால் போதுமானது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply