பெண் டிரைவர்களால் விபத்துக்கள் குறையும். சவுதி அரேபியா அமைச்சர்
கடந்த 2015ஆம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய சவுதி அரேபியா, தற்போது கார் ஓட்டவும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பெண்கள் நீண்டகாலமாக போராடிய உரிமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கொடுத்ததால் விபத்துக்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக சவுதி அரேபியாவின் உள்துறாஇ அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘சவூதியில் பெண்கள் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்கு பயிற்ச்சியளிக்கப்படும் என்றும், இதனால், சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் நிச்சயம் குறையும் என்றும் கூறியுள்ளார்.
எனினும் பழைமைவாத மத குருமார்கள் பெண்கள் கார் ஓட்டுவது சமூகத்திற்கு கெடுதல் செய்து பாவத்திற்கு வழிவிடும் என்று கருதுகிறார்கள்.