சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: உபி அரசுக்கு கண்டனம்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் பெருமை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஒரு மத அடையாளமாக பொதுமக்கள் அதை பார்க்காமல் ஒரு காதலின் நினைவுச்சின்னமாகவே பார்த்ததால் தான் அனைத்து மத சுற்றுலா பயணிகளும் தாஜ்மஹாலுக்கு வருகை புரிந்தனர். இந்திய மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு தாஜ்மஹால் என்றால் கொள்ளைபிரியம்
இந்த நிலையில் சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை உ.பி. அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. உபி அரசின் இந்த நடவடிக்கை உலக அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உலக அதிசயங்கள் ஏழில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றுலா தலங்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் உபி அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.