2017ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

2017ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு


ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறைக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 2017ஆம் ஆண்டின் நோபல் பரிசுகளின் அறிவிப்புகள் வெளியாக தொடங்கிவிட்டது.

அந்த வகையில் முதல்கட்டமாக இந்த ஆண்டின் மருத்துவ நோபல் பரிசு ஜெப்ரி ஹால், மிக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய மூவருக்கும் கிடைத்துள்ளது. அமெரிக்கர்களாகிய இவர்கள் மூலக்கூறு அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் உடலின் உயிர்க்கடிகாரம் செயல்படும் விதம் குறித்து கண்டறிந்ததால் இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக்குழுவின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் தெரிவித்துள்ளார்

Leave a Reply